கடந்த 2010ஆம் ஆண்டு தஞ்சாவூர் ஒரத்தநாடு கிராமத்தை மையமாக வைத்து இயக்குநர் சற்குணம் இயக்கிய படம் களவாணி. இது வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

Advertisment

kalavaani 2

முதல் பாகத்தில் நடித்த விமல் மற்றும் ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கூடுதலாக மயில்சாமி, ஆர்.ஜே. விக்னேஷ் காந்த் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

Advertisment

இப்படத்தை ஜூலை 5ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் களவாணி 2 படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.