Advertisment

வலிமை படத்தால் வந்த சர்ச்சை; போனி கபூர், வினோத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்

high court notice valimai h vinoth and boney kapoor

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்திருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படத்தின் சண்டைக் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே வலிமை படம் மெட்ரோ படத்தின் சாயலில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

Advertisment

இதனை தொடர்ந்து 'வலிமை' படத்தில் தனது கதை மற்றும் கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக 'மெட்ரோ' படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் எச் வினோத் இருவரும் பதிலளிக்க நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் இந்த வழக்கை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது

Advertisment

high court Boney kapoor ACTOR AJITHKUMAR valimai ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe