/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_84.jpg)
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் துல்கர் சல்மான், தமிழிலும் கணிசமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் கடைசியாக இயக்குநர் தேசிங்குபெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழில் பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் 'ஹே சினாமிகா' என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குநரான பிருந்தா முதன்முதலில் இப்படம் மூலம் இயக்குநராக சினிமா துறையில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி நடித்துள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.
சமீபத்தில் வெளியான ஹே சினாமிகா படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. கணவன் மனைவியாக இருந்தகதாநாயகன் கதாநாயகி இருவரும் மீண்டும் பிறந்து எப்படி இணைந்தார்கள் என்பதை சொல்லும் கலர் ஃபுல் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)