`மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். சிவகார்த்திகேயனுடன் அர்ஜூன், பாலிவுட் நட்சத்திரம் அபய் தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்கின்றனர்.

Advertisment

hero

அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஷூட்டிங் இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ள நிலையை இப்படத்தின் தலைப்பு டிசைன் என்ன என்றும், படம் எப்போது ரிலீஸ் என்பதையும் அறிவிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு.