"நடித்தால் தீபிகா படுகோனேவுடன் தான்..." - பிரபல யூட்யூபர் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்

Hero Alom Says Will Only Do a Hindi Movie if Deepika Padukone is Cast Opposite Him

யூட்யூபில் 'ஹீரோ ஆலோம்' என்ற பெயரில் ஒரு சேனலை நடத்தி வருகிறார் அஷ்ரப் ஆலோம் சோஹன். வங்கதேசத்தைச் சேர்ந்த இவர், தனது யூட்யூப் சேனலில் பல ஹிட்டான பாடல்களைத்தாளம் இல்லாமல் பாடுவதையும் மாடல் அழகிகளோடு சேர்ந்து நடனமாடுவதையும் வீடியோவாக பதிவேற்றம் செய்து வருகிறார். யூட்யூபில் 15 லட்சம் சப்ஸ்க்ரைபர்களைக்கொண்டிருக்கும் இவருக்கு அங்கு ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒருவராக இவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு பகுதியில் தனது காதலியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளார் ஹீரோ ஆலோம். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் முன் தன்னுடைய கனவு லட்சியம் குறித்துப் பேசியுள்ளார். அதாவது, இந்தி படத்தில் ஹீரோவாக நடிக்க ஆசை உள்ளதாகவும் அப்படி நடித்தால் தீபிகா படுகோனே தனக்கு ஜோடியாக நடித்தால் மட்டுமே அதில் நடிப்பேன் எனவும் ஒரு கண்டிஷனை போட்டுள்ளார்.

முன்னதாக, கிளாசிக்கல் மற்றும் ரவீந்திர சங்கீத இசையைத்தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக ஹீரோ ஆலோம் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்பு கைது செய்யப்பட்டு,போலீசாரிடம் இனிமேல் அப்படி போடமாட்டேன் எனக் கடிதம் எழுதி உத்தரவாதம் கொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து இப்போது அவர் தன் கனவு லட்சியத்தை சொல்லியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

deepika padukone
இதையும் படியுங்கள்
Subscribe