ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்தாக யார் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்பொழுதே எகிறி வருகிறது. இயக்குனர்கள் மோகன் ராஜா, ஏ.எல்.விஜய், ஷங்கர் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் தற்போது விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நிறுவனம் ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு பூஜை போட இருக்கிறதாகவும் அதில் ஒன்று விஜய் நடிக்கும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் நூறாவது படத்தையும் நடிகர் விஜய்யை வைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தியிருக்கும் நடிகர் ஜீவா அதில் தானும் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.