Advertisment

ஹேமமாலினி குறித்து பரவிய வதந்தி! 

hemamalini

Advertisment

இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில் பாலிவுட்நட்சத்திரங்களின் வீடுகளில்பணிபுரிபவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது நிறைய பாலிவுட் நட்சத்திரங்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் உள்ளிட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகையும் பா.ஜ.க. எம்.பி.-யுமான ஹேமமாலினிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் பலரும் ஹேமமாலினியின் சமூக வலைத்தள பக்கத்துக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர்.

இந்தத் தகவலுக்கு ஹேமமாலினி மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில்,

Advertisment

“நான் மிகவும் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். எனக்கு எதுவும் ஆகவில்லை; உங்களுடைய வாழ்த்துகளாலும், கிருஷ்ணருடைய அருளாலும் நான் உடல்நலத்துடன் இருக்கிறேன். உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

photographers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe