Skip to main content

ஹேமமாலினி குறித்து பரவிய வதந்தி! 

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

hemamalini

 

இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகளில் பணிபுரிபவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது நிறைய பாலிவுட் நட்சத்திரங்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் உள்ளிட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகையும் பா.ஜ.க. எம்.பி.-யுமான ஹேமமாலினிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் பலரும் ஹேமமாலினியின் சமூக வலைத்தள பக்கத்துக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர்.

 

இந்தத் தகவலுக்கு ஹேமமாலினி மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில்,

 

“நான் மிகவும் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். எனக்கு எதுவும் ஆகவில்லை; உங்களுடைய வாழ்த்துகளாலும், கிருஷ்ணருடைய அருளாலும் நான் உடல்நலத்துடன் இருக்கிறேன். உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்க புகைப்படக் கண்காட்சி நிறைவு விழா (படங்கள்)

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கண்காட்சி தொடங்கியதில் இருந்து இன்றுவரை ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இக்கண்காட்சிக்கு வருகை தந்து புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்தனர். மேலும், இதழியல் மற்றும் காட்சித்தொடர்பியல் துறையில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு கண்காட்சியில் பத்திரிகை துறை தொடர்பான வகுப்புகளும் நடப்பட்டன. கண்காட்சியின் நிறைவு விழா இன்று (17.02.2023) நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களான அருண் ராம், ரஞ்சிதா குணசேகரன், கார்த்திகைசெல்வன் மற்றும் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்க புகைப்படக் கண்காட்சி (படங்கள்)

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாதெமியில் இன்று (10.02.2023) தொடங்கியது. இக்கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்து தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் தயாரித்திருந்த புகைப்படத் தொகுப்பு அடங்கிய புத்தகத்தை முதல்வர் வெளியிட, இந்து என்.ராம் பெற்றுக்கொண்டார்.  உடன் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, எழிலன் எம்.எல்.ஏ மற்றும்  வேலம்மாள் பள்ளி இயக்குநர் வேல்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். விழாவில் நக்கீரன் ஆசிரியர், நல்லி குப்புசாமி, ஆ.கே மற்றும் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த புகைப்படக் கலைஞர்கள் தற்போது பணியாற்றும் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். விழா நிறைவில் மாணவர்கள் கண்காட்சியில் உள்ள பல்வேறு புகைப்படங்களைக் கண்டு ரசித்தனர்.