Advertisment

சின்னத்திரை நாயகியாக அவதாரம் எடுத்த ஊடகவியலாளர்..!

hamarakesh

Advertisment

பிரபல செய்தி வாசிப்பாளர் ஆக இருந்து வந்த ஹேமா ராகேஷ், தற்போது சின்னத்திரை நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

பூர்வீகம் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஹேமா ராக்கேஷ், ஆரம்பத்தில் அதே பகுதியில் ஆர்வத்தில் லோக்கல் கேபிள் சேனல் ஒன்றில் தொகுப்பாளர் ஆக சேர்ந்தார். பின்னர் வாய்ப்புகள் கிடைக்கவே சென்னையில் பத்திரிகை துறையில் கால்பதித்தார். பின்னர் படிப்படியாக தன் முயற்சி மற்றும் உழைப்பால் பிரபல தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளர் ஆகவும், தொகுப்பாளர் ஆகவும் முத்திரை பதித்துவந்தார்.

இதுபோக சோசியல் மீடியாவிலும் தனி தடம் பதித்துவருகிறார், மறுமுகமாக சமூகசேவை, பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார், தான் பிறந்த சொந்த மண்ணிற்கு என்ன செய்தோம் என்ற தேடலின் விடை தொன்மையின் அடிச்சுவடு என்ற ஆவணப்படத்தை இயக்கியதின் மூலம் இயக்குனர் ஆனார். தற்போது புதிய அவதாரமாக சின்னத்திரையில் பிரபல தனியார் டி.வியில் ஒளிப்பரப்பாகும் நாயகி தொடரில் நடிகையாக தன் முதல் தடத்தை பதிக்கிறார், விடா முயற்சி வெற்றியை தரும் என்ற ஹேமாவின் சாதனைகள் தொடரட்டும்.

kollywood
இதையும் படியுங்கள்
Subscribe