தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா – அமலா தம்மபதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் வெற்றி பெற்ற 'ஹலோ' படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. படத்தை தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்க, கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். ரம்யாகிருஷ்ணன், ஜெகபதிபாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் குறித்து நாயகன் அகில் பேசியபோது...
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
"நான் குழந்தையாக நடித்த 'சுட்டிக் குழந்தை' படத்தை வெற்றிபெற செய்த தமிழக மக்கள் மீது எப்பொழுதும் எனக்கு மதிப்பு உண்டு. அதே போல் என் அம்மா தமிழ் படத்தில் அறிமுகமாகி தான் புகழ் அடைந்தார். இந்த 'ஹலோ' படம் நான் கதாநாயகனாக நடித்துள்ள படம். இந்த படத்தையும் தமிழ் ரசிகர்கள் பெரும் வெற்றிபெற செய்வார்கள் என்று நம்புகிறேன். என் நன்றியை தமிழ் ரசிகர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். ரொமாண்டிக் ஆக்ஷன், திரில்லர் கலந்த பக்கா கமர்ஷியல் சினிமா இது. இந்த படத்தின் பிரமாண்டமான சண்டை காட்சிகளுக்காக இங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்களுடன் தாய்லாந்து ஸ்டன்ட் கலைஞர்களும் இணைந்து பணியாற்றி உள்ளனர். படத்தின் ஐந்து பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது" என்றார்