Advertisment

சமூக ஊடகங்களில் பரவும் ‘ஹெலன்’ தமிழ் ரீமேக் தலைப்பு...

keerthy pandian

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி செம ஹிட்டான படம் ‘ஹெலன்’. கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அன்னா பென், இந்த படத்தில் ஹெலன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவரின் தந்தை கதாபாத்திரத்தில் சண்டக்கோழி லால் நடித்திருக்கிறார்.

Advertisment

கனடா செல்வதற்காக படித்துக்கொண்டிருக்கும் வேளையில் பீட்சா கடை ஒன்றில் பார்ட் டைம் வேலையில் இருப்பார் ஹெலன். அப்போது அங்கிருக்கும் குளிர்சாதன அறையில் மாட்டிக்கொள்கிறார். அவர் உள்ளே மாட்டிக்கொண்டு விட்டார் என்பது தெரியாமல் அனைவரும் கடையை முடிவிட்டு சென்றுவிடுவார்கள். அதன்பின் ஹெலன் எப்படி தப்பிக்கிறாள் என்பதுதான் கதை. மலையாளத்தில் இப்படத்தை வினித் சீனிவாசன் தயாரிக்க மதுக்குட்டி சேவியர் இயக்கியிருந்தார்.

Advertisment

இந்த படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழில் ரீமேக் செய்ய பலரும் இதன் உரிமையை வாங்க போட்டி போட்டுக்கொண்டனர். கடைசியில் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் இதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார்.

தந்தை, மகள் இருவருக்குமான பாசத்தை அதிகம் இப்படம் பேசும் என்பதால் அருண் பாண்டியன், அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இருவருமே இக்கதையில் நடிக்கின்றனர். பல வருட இடைவேளைக்கு பின்னர் அருண் பாண்டியன் தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கி பிரபலமான கோகுல் இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்திற்கு ‘அன்புக்கு இனியாள்’ என்று பெயரிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

keerthy pandian
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe