Skip to main content

சமூக ஊடகங்களில் பரவும் ‘ஹெலன்’ தமிழ் ரீமேக் தலைப்பு...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020
keerthy pandian

 

 

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி செம ஹிட்டான படம் ‘ஹெலன்’. கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அன்னா பென், இந்த படத்தில் ஹெலன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவரின் தந்தை கதாபாத்திரத்தில் சண்டக்கோழி லால் நடித்திருக்கிறார்.

 

கனடா செல்வதற்காக படித்துக்கொண்டிருக்கும் வேளையில் பீட்சா கடை ஒன்றில் பார்ட் டைம் வேலையில் இருப்பார் ஹெலன். அப்போது அங்கிருக்கும் குளிர்சாதன அறையில் மாட்டிக்கொள்கிறார். அவர் உள்ளே மாட்டிக்கொண்டு விட்டார் என்பது தெரியாமல் அனைவரும் கடையை முடிவிட்டு சென்றுவிடுவார்கள். அதன்பின் ஹெலன் எப்படி தப்பிக்கிறாள் என்பதுதான் கதை. மலையாளத்தில் இப்படத்தை வினித் சீனிவாசன் தயாரிக்க மதுக்குட்டி சேவியர் இயக்கியிருந்தார். 

 

இந்த படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழில் ரீமேக் செய்ய பலரும் இதன் உரிமையை வாங்க போட்டி போட்டுக்கொண்டனர். கடைசியில் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் இதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார். 

 

தந்தை, மகள் இருவருக்குமான பாசத்தை அதிகம் இப்படம் பேசும் என்பதால் அருண் பாண்டியன், அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இருவருமே இக்கதையில் நடிக்கின்றனர். பல வருட இடைவேளைக்கு பின்னர் அருண் பாண்டியன் தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கி பிரபலமான கோகுல் இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்திற்கு ‘அன்புக்கு இனியாள்’ என்று பெயரிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நிறைய புலம்பியிருக்கேன்” - அசோக் செல்வன் பேசும்போது அழுத கீர்த்தி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
ashok selvan speech in blue star success meet

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில், பா. ரஞ்சித், அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். 

அதில் அசோக் செல்வன் பேசுகையில், “இந்த படம் மாதிரியான படங்கள் நடிக்கதான் சினிமாவுக்குள் வந்தேன். ஒரு படம் வெறும் வெற்றிப் படமாக இல்லாமல், எதாவது ஒரு கருத்தை முன்வைக்க வேண்டும். இந்த படத்தை அரசியல் படமா என்று கேட்டால் இல்லைன்னுதான் சொல்வேன். எல்லாரும் சேர்ந்து ஒன்னா வாழுறது என்பது அரசியல்னா அது என்னது. எனக்கு புரியல.

ரஞ்சித் ஒரு புரட்சிக்கான அடையாளமாக மாறிவிட்டார். அவருடைய இலக்கு ரொம்ப பெரிசாக இருக்குது. அதனால் அவருடைய உழைப்பை யாரும் பேசமாட்டேங்கிறாங்க. இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ரஞ்சித். கீர்த்தியிடம் நிறைய முறை நம்ம உழைப்ப போட்டு ஒரு படம் பண்றோம். அதுக்கு ஏன் கைதட்ட மாட்டேங்குறாங்ன்னு புலம்பியிருக்கேன். அவளும் சரியாகிவிடும் என சொல்லுவாள்” என்றார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த கீர்த்தி பாண்டியன் எமோஷ்னலாகி அழுதார்.

தொடர்ந்து பேசிய அசோக் செல்வன், ஷாந்தனுவும், ப்ரித்வியும் அவங்க அப்பா பத்தி பேசியதால், எனக்கும் என் குடும்பதில் யாரையாவது பத்தி பேச தோனுது. என் தாத்தா சொன்னது தான் ஞாபகம் வருது. அவர் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர். நான் முதல் முறையா தமிழில் டிடெக்டிவ் படம் பண்றேன். அந்த பட ஷூட்டிங் போது இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்னால், ‘சிவாஜி கணேசன் பேரனும் நடிகன், முத்துராமன் பேரனும் நடிகன், என் பேரனும் நடிகன்’ என அம்மாவிடம் சொல்லியிருக்கார்” என்றார். 

Next Story

“இந்தியா முழுக்க இதை செய்ய வேண்டும்” - பா.ரஞ்சித்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
pa.ranjith speech in blue star audio launch

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவரது இசையில் ‘ரெயிலின் ஒலிகள்...’, ‘அரக்கோணம்’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித், அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பா.ரஞ்சித், “இன்று ரொம்ப முக்கியமான நாள். வீட்டில் கற்பூரம் கொளுத்தாவிட்டால் தீவிரவாதிகள் ஆகி விடுவோம். அந்த அளவிற்கு பயங்கரமா போயிகிட்டு இருக்கு. ரொம்ப தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்கிறது. இன்னும் 5, 10 ஆண்டுகளில், எப்படி ஒரு மோசமான இந்தியாவில் இருக்க போகிறோம் என்ற பயம் இருக்கிறது. அந்த காலகட்டத்திற்கு நுழைவதற்குள், நம்மளை நாம் சரி செய்வதற்கு, நம் மனதை பண்மைப்படுத்துவதற்கு, நம் மூளையில் ஏற்றி வைத்திருக்ககூடிய பிற்போக்குத்தனத்திற்கு, தினம் தினம் சொல்லிகொடுக்கிற மதவாதத்தை அழிப்பதற்கு கலையை நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.   

மக்களிடம் எளிதாக சென்றடையக் கூடிய கருவி கலை. இந்த கலை, ரொம்ப வலுக்கட்டாயமாகத் திணித்துக் கொண்டிருக்கிற பிற்போக்குத்தனத்தை அழிக்கும் என நம்புகிறோம். அந்த நம்பிக்கையோடு தான் கலையை நாம் கையாண்டு வருகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்திற்கு தள்ளிப் போக விடாமல், தடுத்து நிறுத்த நம்மளால் முடிந்ததை செய்ய வேண்டும். இந்தியா முழுக்க இதை செய்ய வேண்டும். இன்றைய நாள் ரொம்ப முக்கியமானதாக நாம் பார்த்து வருகிறோம். இன்றையிலிருந்து ஒரு புதிய வரலாறே ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கே இருக்க போகிறோம் என்ற யோசனை நமக்கு வேண்டும். ப்ளூ ஸ்டார், நீல நட்சத்திரம், நீல வானம்...அந்த நீலம் சரியான இடத்தை நோக்கி நம்மை வழி நடத்தும் என நம்புகிறேன்” என்றார்.