Skip to main content

மீண்டும் நடிகராக களம் இறங்கும் அருண் பாண்டியன்!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி செம ஹிட்டான படம் ‘ஹெலன்’. கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அன்னா பென், இந்த படத்தில் ஹெலன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.  இவரின் தந்தை கதாபாத்திரத்தில் சண்டக்கோழி லால் நடித்திருக்கிறார்.
 

helen

 

 

கனடா செல்வதற்காக படித்துக்கொண்டிருக்கும் வேளையில் பீட்சா கடை ஒன்றில் பார்ட் டைம் வேலையில் இருப்பார் ஹெலன். அப்போது அங்கிருக்கும் குளிர்சாதன அறையில் மாட்டிக்கொள்கிறார். அவர் உள்ளே மாட்டிக்கொண்டு விட்டார் என்பது தெரியாமல் அனைவரும் கடையை முடிவிட்டு சென்றுவிடுவார்கள். அதன்பின் ஹெலன் எப்படி தப்பிக்கிறாள் என்பதுதான் கதை. மலையாளத்தில் இப்படத்தை வினித் சீனிவாசன் தயாரிக்க மதுக்குட்டி சேவியர் இயக்கியிருந்தார். 
 

day


இந்த படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழில் ரீமேக் செய்ய பலரும் இதன் உரிமையை வாங்க போட்டி போட்டுக்கொண்டனர். கடைசியில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் இதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார். 

தந்தை மகள் இருவருக்குமான பாசத்தை அதிகம் இப்படம் பேசும் என்பதால் அருண் பாண்டியன், அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இருவருமே இக்கதையில் நடிக்கின்றனர். பல வருட இடைவேளைக்கு பின்னர் அருண் பாண்டியன் தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கி பிரபலமான கோகுல் இப்படத்தை இயக்குகிறார். விரைவில் இப்படத்திற்கான ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

"எப்போதுமே திகைப்பேன்" - சூர்யா வாழ்த்து

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

suriya wishes mammooty jyothika kaathal movie trailer

 

மலையாளத்தில் மம்மூட்டி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம்  'காதல் - தி கோர்'. இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா. மேலும் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டியுடன் முதல் முறையாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

இந்த படம் கோவாவில் வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்கும் 54வது கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து வருகிற 23ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. 

 

இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு படக்குழு வெளியிட்டது. ட்ரைலரில் மம்மூட்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அப்போது ஒரு பிரச்சனை வருகிறது. இதை தாண்டி இடைத்தேர்தலில் நின்று ஜெயித்தாரா, என்ன பிரச்சனை வந்தது என்பதை விரிவாக காண்பித்துள்ளது போல் தெரிகிறது. இந்த ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, "மலையாளத் திரையுலகம் எப்படி சவாலான கதைகளை குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக உருவாக்குகிறது என்பதைப் பார்த்து எப்போதுமே திகைப்பேன்" எனக் குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.