எம்ஜிஆர் சினிமாவிலும்அரசியலிலும் மாபெரும் ஆளுமை.அவரை பேசாமல் தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவும்தமிழக அரசியலும் இருக்காது. எம்.ஜி.ஆரின் இன்றைய நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்களும்திரைப்பிரபலங்களும் நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகரும்மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
“மேடையில் மாணவராகத் தொடங்கி திரையில் வாத்தியார் ஆனவர். இணையற்ற தலைவராக இன்றுவரை மக்களின் மனதில் நிலைத்திருப்பவர், ஆனந்தஜோதி படத்துக்காக எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து, இன்று அவரது களத்திலேயே நான் நீந்தக் காரணமானவர் எங்கள் எம்ஜிஆர். நினைவுநாளில் வணங்குகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.