Advertisment

இந்த வாய்ப்பு வாங்கி தந்தது இவர்தான்; ரகசியம் உடைத்த இசையமைப்பாளர் சித்து குமார்

 He is the one who bought this opportunity; Sidhu Kumar who broke the secret

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

Advertisment

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் சித்து குமார் பேசியதாவது, “இந்த பட வாய்ப்பு அமைந்தது திங்க் மியூசிக் சந்தோஷ் மூலம் தான். அவர்தான் இயக்குநர் ரோகினை அறிமுகப்படுத்தி வைத்தார். என்னை இந்தப் படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி. லைகா போன்ற நிறுவனத்தில் படம் செய்வது மகிழ்ச்சி. எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த சில சம்பவங்களை இந்தப்படம் ஞாபகப்படுத்தும். சிலருக்கு இந்தப் படம் விழிப்புணர்வு தரும். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்” என்றார்.

Advertisment

Siddhu kumar PRESS MEET Theera kaadhal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe