Skip to main content

இந்த வாய்ப்பு வாங்கி தந்தது இவர்தான்; ரகசியம் உடைத்த இசையமைப்பாளர் சித்து குமார்

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

 He is the one who bought this opportunity; Sidhu Kumar who broke the secret

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில்  நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிகை  மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 

 

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் சித்து குமார் பேசியதாவது, “இந்த பட வாய்ப்பு அமைந்தது திங்க் மியூசிக் சந்தோஷ் மூலம் தான். அவர்தான் இயக்குநர் ரோகினை அறிமுகப்படுத்தி வைத்தார். என்னை இந்தப் படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி.  லைகா போன்ற நிறுவனத்தில் படம் செய்வது மகிழ்ச்சி. எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த சில சம்பவங்களை இந்தப்படம் ஞாபகப்படுத்தும். சிலருக்கு இந்தப் படம் விழிப்புணர்வு தரும். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜோ பட பாடல் இவர் எழுதப்போறாருன்னு சொன்னதும் நம்பவில்லை” - இசையமைப்பாளர் சித்துகுமார்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Joe Movie Music Director Siddhu Kumar Interview

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக இசையமைப்பாளர் சித்து குமாரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவரளித்த பதில்கள் பின்வருமாறு..

ஜோ படத்தின் பாடல்கள், பிண்ணனி இசை முடிந்து பைனல் அவுட்புட் எடுக்கும் போது இரு ஒரு கம்போசராக எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப திருப்தியாக இருந்தது. திரையரங்கில் என்ன ரிசல்ட் வரும் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. பெரும் வெற்றியைக் கண்ட பிறகு இன்னும் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனதினை பக்குவப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். 

ராஞ்சனா, ரப்னே பனா ஜோடி போன்ற பாலிவுட் படங்களின் இசைக்கோர்வை எப்போதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும், அது நான் இசையமைக்கும் போது இன்ஸ்பிரேசனாகவும், ரொமாண்டிக் மூட் செட்டுக்கும் பயன்படும். சர்வதேச இசையமைப்பாளர்களின் இசை அதிகம் கேட்பேன், உறவுகள் தொடர்கதை பாடலை அடிக்கடி கேட்பேன், அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாகவும் எப்போதுமே இருக்கிறது.

ஜோ படத்திற்கு இசையமைக்கும் போது படத்திற்கு அப்பாற்பட்டு போய்விடக்கூடாது, அது படத்துடனேயே பயணிக்க விரும்பியே வேலையை ஆரம்பித்தேன். உருகி பாடல் தான் முதலாவதாக ஆரம்பமானது அதற்கடுத்த பாடலுக்கான வரிகள் கூட நாயகன் ரியோ தான் எடுத்துக் கொடுத்தாரு, அவர் பாடல் எழுதப்போறேன்னு சொன்னதும் நம்பவில்லை, அப்புறம் அதை தவிர்க்கும்படியாக இல்லாமல் சிறப்பாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் ஆகிவிட்டது. 

Next Story

“பயங்கரமான ஆளுன்னு சொன்னாங்க... ஆனா எனக்கு மயிலிறகு கொடுத்தாரு” - வீரப்பனை பற்றி பிரபாவதி ஆர்.வி.

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
 Prabbhavathi RV speech in Koose Munisamy Veerappan press meet

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. இதில் நக்கீரன் ஆசிரியர், தயாரிப்பாளர் பிரபாவதி மற்றும் ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன், ஷரத் ஜோதி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.   

அப்போது தயாரிப்பாளர் மற்றும் இந்த சீரிஸை உருவாக்கியவர்களில் ஒருவரான பிரபாவதி ஆர்.வி. பேசுகையில், “இந்த மேடை எனக்கும் தீரன் ப்ரொடக்‌ஷன்ஸுக்கும் முக்கியமான ஒன்று. இந்த இடத்திற்கு நான் வர எனக்கு உறுதுணையாக இருந்த அப்பா, அம்மா, நண்பர்கள் எங்கள் நக்கீரன் குடும்பம் ஆகியோருக்கு நன்றி. சின்ன வயதிலிருந்து சில விஷயங்கள் நம்மை பாதிக்கும். ஒரு எமோஷனை கிரியேட் பண்ணும். அப்படி ஒரு விஷயம் நடந்தது. 

திடீர்னு ஒருநாள் அப்பா எங்கயோ போறாங்க. வீட்ல அம்மா அழுறாங்க. எல்லாருமே பயத்துடன் இருக்காங்க. ஒரு சாதாரணமான சூழலே இல்லை. முதலமைச்சர் முதல் பெரிய பெரிய ஆட்கள் ஃபோன் பண்றாங்க. என்னம்மா ஆச்சுன்னு அம்மாவிடம் கேட்டபொழுது, அப்பா வீரப்பன்னு ஒருத்தரை பார்க்க போறாருன்னு சொன்னாங்க. யாரு அவருன்னு கேட்டதற்கு, அம்மாவிற்கும் பெரிசாக தெரியவில்லை. ஆனால் ரொம்ப பயங்கரமான ஆளு, யானை, மனுஷங்களையெல்லாம் கொன்னுருக்காருன்னு சொன்னாங்க.

எங்களுக்கு அப்பாவ விட்டா ஒன்னும் கிடையாது. அவருக்கு நக்கீரன் பத்திரிகை, அவருடைய தம்பிகள், அவங்களுடைய குடும்பம் இது அனைத்திற்குமே அப்பாதான் அஸ்திவாரம். இப்படி இருக்கையில், ஏன் அப்பா போறாருன்னு யோசிப்பேன். திடீர்னு வருவாரு. காலில் எல்லாம் அட்டை பூச்சி கடிச்ச தடம் இருக்கும். வலியும் இருக்கும். அதை பார்க்கும் பொழுது நமக்கு கஷ்டமாக இருக்கும். ஒரு நாள் மயிலிறகை நீட்டி இது வீரப்பன் கொடுத்தாருன்னு கொடுத்தார். என்னடா... பயங்கரமான ஆளுன்னு சொல்றாங்க... ஆனா நமக்கு பிடிச்ச மயிலிறகை கொடுத்திருக்கிறாரே... இவர் எப்படிப்பட்ட ஆளு என சின்ன வயதிலிருந்தே எண்ணம் இருக்கும்.   

பின்பு நான் காலேஜ் போறேன். நக்கீரன் 25வது ஆண்டு வருது. அதன் வரலாறை டாக்குமெண்ட்ரி பண்ண முடிவெடுத்தேன். அதற்காக காட்டுக்குள் போறேன். அந்த மக்களை சந்தித்து பேசும்பொழுது, இவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்களே என அவர்கள் வலியை நினைத்து 3 நாள் தூக்கமே வரவில்லை. அதனால் சின்ன வயதிலிருந்து ஏற்பட்ட பாதிப்புகள், மனதில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இதை ஒரு பெரிய ஆவணப் படைப்பாக மக்களிடம் சேர்க்க வேண்டுமென தோனுச்சு. அப்பாவிடம் கேட்டேன். பெரிய பெரிய ஆட்கள் இதை ஆவணப்படுத்த கேட்டபொழுது கூட அப்பா தரவில்லை. சரி நம்ம அப்பாதான, கேட்டவுடனே கொடுத்துருவாங்கன்னு நினைத்தேன். ஆனால் மற்றவர்களை விட எனக்கு நிறைய டெஸ்ட் வச்சாங்க. எக்ஸாம் வைக்காததுதான் பாக்கி.     

ஏனென்றால், நக்கீரன் எப்பொழுதும் எளிய மக்களுடைய குரலாக இருந்திருக்கிறது. அப்பா காட்டிற்கு போனது கூட அந்த மலைவாழ் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு கிடைக்குமா என்பதற்காகத்தான். ஒரு ஆவணம், எல்லாத்தையும் சரியாகவும் நேர்மையாகவும் கொண்டு போய் சேர்க்கணும் என்ற நம்பிக்கையை கொடுத்த பிறகுதான் முழு நம்பிக்கையோடு அப்பா கொடுத்தார். அந்த நம்பிக்கைக்காக அப்பாவிற்கு பெரிய நன்றி. அதன் பிறகுதான் தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ் ஆரம்பித்தேன். பின்பு தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவிடம் போனேன். எல்லா சந்தேகத்தையும் தீர்த்தார். ரொம்ப சப்போர்ட் பண்ணார். ஜீ குழுமம் இப்போது வரைக்கும் பெரிய சப்போர்ட்டாக இருக்கிறது. 

என்னுடைய கனவை அவங்களுடைய கனவாக நினைத்து உறுதுணையாக நடந்துக்கிட்டது ஜெய் மற்றும் வசந்த் அண்ணா. அவங்க இல்லன்னா இந்த ப்ராஜெக்ட் இந்த இடத்தில் இப்படி இல்லை. அவங்க எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். அப்புறம் இயக்குநர் ஷரத், ஒளிப்பதிவாளர் ராஜ், படத்தொகுப்பாளர் ராம், இசையமைப்பாளர் சதீஷ் என எல்லாருமே அவரவர்களின் உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். என்.ராம் சாரில் தொடங்கி, சீமான், ரோகிணி என அனைவருக்குமே பெரிய நன்றி. படக்குழுவிற்கும் நக்கீரன் டீமிற்கும் ட்ரைலரை வெளியிட்ட சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் அண்ணா எல்லாருக்குமே பெரிய நன்றிகள்” என்றார்.