salman

Advertisment

இந்திய சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சல்மான் கான். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், தயாரிப்பு நிறுவனம், தொண்டு நிறுவனம் என்று பல துறைகளில் கால்பதித்துள்ளார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இந்த வருடத்திற்கான பிக்பாஸ் ப்ரோமோ அண்மையில்தான் வெளியாகி பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் ரௌடி ஒருவர், தான் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வேறு ஒரு வழக்கில் ஹரியானா காவல்துறை ராகுல் என்பவரை கைது செய்துள்ளது. இவர் லாரன்ஸ் பிஸோனி கேங்கை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த ஜனவரி மாதம் மும்பையில் உள்ள சல்மான் கான் அப்பார்ட்மென்ட் அருகில் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மான் வேட்டையாடிய வழக்கு காரணமாக அவர் சல்மானை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸிடம் தெரிவித்துள்ளார்.