Skip to main content

மீடூ-வில் சிக்கிய தயாரிப்பாளருக்கு கரோனா வைரஸ்!

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீவன் நடிகைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காகவும், கேஸ்டிங் கவுச் செய்ததற்காகவும் மீ டூ புகார் அவர் மீது வைக்கப்பட்டது. 
 

harvey weinstien

 

 

 

ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறினார்கள்.

2006-ல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட தயாரிப்பு பெண் நிர்வாகி மிமி ஹலேயியும், 2013-ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நடிகை ஒருவரும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹார்வி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

23 வருடங்கள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஹார்வி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2 வாரமாக நியூயார்க் சிறையில் இருக்கும் ஹார்வி வெயின்ஸ்டீன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்