harris jayaraj announced brother movie song

Advertisment

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் ராஜேஷ்.எம், தொடர் தோல்வி படங்கள் கொடுத்து வந்தார். தற்போது அவர், ஜெயம் ரவியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்க மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிரதர் (Brother)’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில், பூமிகா, விடிவி கணேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவர இருக்கும் இப்படத்தின் பாடலை ‘திங் மியூசிக்’ ஆடியோ உரிமையை வாங்கியிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், திருமண வரவேற்பில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சேர்ந்து பாடலை பாடி கொண்டாடி வருவது போல் இடம்பெற்றியிருந்தது. சில நொடிகளில் மட்டுமே வரும் அந்த ஹம்மிங் ரசிகர்களை முனுமுனுக்க செய்தது.

இந்த நிலையில், இப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் இப்படத்தில் ‘மக்காமிஷி’ எனத் தலைப்பில் தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘வாட் இஸ் மக்காமிஷி?’ என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்.