Skip to main content

'ஒருபுறம் லுங்கி, மற்றொரு புறம் மாடர்ன் ட்ரெஸ்' - 'பியார் பிரேமா காதல்' கதை இது தான் 

Published on 07/08/2018 | Edited on 07/08/2018

 

maniyarfamily

 

ppk

 

 

 

'பிக்பாஸ்' புகழ் ஹரிஷ் - ரைசா ஜோடியின் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் 'பியார் பிரேமா காதல்' படத்தை ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸுக்காக இர்ஃபான் மாலிக்குடன் சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவும் மற்றும் கே ப்ரொடக்‌ஷன்ஸ் எஸ் என் ராஜராஜனும் தயாரிக்கிறார்கள். இந்நிலையில் படம் குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசும்போது... "எல்லோரும் படத்தில் என்னுடைய ஆடைகள் பல்வேறு விதமாக கலந்திருப்பதை கவனித்திருப்பார்கள். ஒருபுறம் லுங்கி மற்றும் மற்றொரு புறம் மாடர்ன் ட்ரெஸ். ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க பையன், உயர்தர வர்க்க பெண்ணை காதலிக்க, ஒரு ஸ்டைலான பணக்கார பையனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் உள்ளார்ந்த ஆசை உள்ளது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பியார் பிரேமா காதல் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாகும். இது ஒரு ஒரிஜினல் திரைப்படம் என்று நான் கூறுவேன். யுவன் சார் இப்படத்தை இசை நேர்த்தியுடன் உருவாகும் ஒரு படமாக மட்டும் உருவாக்க விரும்பவில்லை.  இந்த படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்தார். அவரது சமரசமற்ற தன்மை தான் நாம் அனைவரும் பார்த்த ப்ரோமோ காட்சிகள் மற்றும் டிரெய்லரில் தெரிந்தது" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குனருக்கு கார் பரிசளித்த யுவன்!

Published on 17/08/2018 | Edited on 19/08/2018
ilan

 

 

 

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் - ரைசா ஜோடி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'பியார் பிரேமா காதல்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருவதால் படத்தின் தயாரிப்பளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனர் இலனுக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து இலன் பேசும்போது.... "இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை  விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கையும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குனருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும்" என்றார்.

 

 

தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.புரொடக்ஷன்ஸ் ராஜராஜன் இதுகுறித்து பேசும்போது... "ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடாது என்பேன். படம் பார்க்க வரும் ரசிகன் முகம்  மலர்ச்சியுடன், அயர்ச்சி இல்லாமல் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால், அவனுடைய அந்த திருப்தி தான், தயாரிப்பாளருக்கும் பெருமை, தயாரிக்கும் நிறுவனத்துக்கும் பெருமை. எங்கள் இயக்குனர் இலன் எங்களுக்கு அந்த பெருமையை அளித்து உள்ளார். யுவனின் இசைக்கு ஈடு தந்து படத்தின் வெற்றியை கோலாகலமாக்கி இருக்கிறார். அந்த உழைப்புக்கும், உத்வேகத்துக்கும் எங்களின் சிறிய பரிசு தான் இந்த கார். இலன் தந்த நம்பிக்கை, எங்களுக்கு மிக பெரிய உந்துதல்.  இன்னமும் இளைய இயக்குனர்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து, தமிழ் திரை உலகிற்கு  பெருமை சேர்ப்போம்" என்றார்.

 

 

 

Next Story

**** யூ சொல்லும் பொண்ணு... MISS யூ சொல்லும் பையன்! பியார் பிரேமா காதல் - விமர்சனம் 

Published on 12/08/2018 | Edited on 12/08/2018

லிவ்-இன்... பிரேக்-அப்... ஹேங்-அவுட்... ஒரு ஷாட் வோட்கா... **** யூ, மிஸ் யூ... இவையெல்லாம் காதலின் லேட்டஸ்ட் வொக்காபுலரி (VOCABULARY). இதையெல்லாம் கேட்டால் கடுப்பாகுபவர்கள் என்றால் உங்களுக்கல்ல பியார் பிரேமா காதல். இதையெல்லாம் இதுவரை கேட்டிராத சிறுவர்கள், குழந்தைகளுக்குமல்ல பியார் பிரேமா காதல். யாருதான்ப்பா பாக்குறது என்றால் இரண்டுக்கும் இடைப்பட்ட இளமை மனதில் வழிபவர்கள், நிகழ் கால மாற்றங்களை ஏற்றுக்கொள்பவர்கள் பார்த்தால் கொண்டாடலாம். (முரட்டு சிங்கிள்ஸ் பார்க்கவேண்டாம், வயிற்றுக்கு நல்லதல்ல).

 

pyar prema kadhal



இத்தனை பில்ட்-அப் கொடுக்குமளவுக்கு பெரிய படமா என்றால், மிக சாதாரணமான, அழகான காதல் படம்தான். நிகழ் காலத்தை அழகாக, நகைச்சுவையாக சொல்லியிருப்பதால் வேறுபடுகிறது இயக்குனர் இளனின் பியார் பிரேமா காதல். "அப்பா... நேத்து நீங்க இல்லாதப்போ ஸ்ரீ யை நான் வீட்டுக்குக் கூப்பிட்டு வந்தேன்" என்று கேசுவலாக தன் தந்தையிடம் சொல்லுமளவுக்கு முற்போக்கான இளம் பெண் சிந்துஜா (ரைஸா வில்சன்). அவரது மாடர்ன் டான்ஸ் ஃப்ரீக் தந்தையாக ஆனந்த்பாபு. "பொண்ணு வேலைக்குப் போறதா.. அதான் என் பையன் சம்பாரிக்கிறானே" என்று தங்கள் மகனுக்குப் பெண் தேடும் பாண்டியன்-ரேகா ஜோடி. அவர்களின் அடக்கமான இளையராஜா - ரஜினியை ரசிக்கும் மகன் ஸ்ரீகுமாராக ஹரிஷ் கல்யாண். ஹரிஷ் கல்யாணுக்கு காதல் அட்வைஸ் சொல்ல 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், அடி, திட்டு எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளும் நண்பனாக தீப்ஸ், கடைசி வரை வாயே திறக்காமல் கவனிக்க வைத்த 'இவனே', இவர்கள் தவிர ஆஃபிஸ் பாஸ் சுப்பு பஞ்சு, இந்த சின்ன வட்டத்துக்குள், ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஹரிஷ்-ரைஸா இடையில் நடக்கும் காதல், மோதல், லிவ்-இன், பிரேக்-அப் கதைதான் படம்.

 

ppk inside



'யுவன் இஸ் பேக்' என்று பல படங்கள் வரும்போதும் சொன்னார்கள். உண்மையில் இந்தப் படத்தில் சொல்லலாம், ஆனாலும் பழைய யுவன் வேற லெவல்தானே. தனது தயாரிப்பு என்பதாலோ என்னவோ இசையை அள்ளித் தெளித்திருக்கிறார் யுவன். 'ஹே பெண்ணே', 'டோப் ட்ராக்' இரண்டும் தியேட்டரில் அதிக லைக்ஸ் வாங்குகின்றன. பின்னணி இசையாக வரும் சின்னச் சின்ன பாடல்கள் யுவன் ஸ்பெஷல். இருந்தாலும் ஆங்காங்கே பின்னணி இசைக்கு பதிலாக மௌனம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஹரிஷ், ரைஸா இருவரும் பாத்திரங்களில் மிக அழகாகப் பொருந்துகிறார்கள், எளிதாக நடித்திருக்கிறார்கள். ரைஸாவுக்கு அதீத மேக்-அப்பும் ஹரிஷுக்கு நடனமும் குறையாக இருக்கின்றன. மற்றபடி இருவருக்குமான கெமிஸ்ட்ரி நல்ல மார்க் வாங்குகிறது, ஹார்டின் ஸ்மைலீ போடலாம். நடிகர்களில் யாரும் குறைவைக்கவில்லை. நண்பனாக வரும்  தீப்ஸ், இவனே, அலுவலக ஹவுஸ்கீப்பிங் அக்கா பாத்திரங்கள் கவனிக்கவைக்கின்றன.

 

 


ராஜா பட்டாச்சார்ஜீயின் ஒளிப்பதிவில் படம் மேலும் அழகாகிறது. ஒவ்வொரு காட்சியுமே அழகிய ஃபோட்டோ ஃப்ரேம் போல இருக்கின்றது. இந்த அழகில் ஆடை வடிவமைப்பாளர்கள் மகேஸ்வரி, நிசார்க்கும் பங்கு இருக்கிறது. நடுத்தர குடும்ப இளைஞன் என்றாலும் அத்தனை சட்டைகளில் ஒன்றைக் கூட திரும்ப அணியாதது...? இன்னும் யதார்த்தத்துக்கு தூரம்தான்.

  ppk2



மாடர்ன் பெண் என்றாலும் அவள் பார்வையில் உள்ள நியாயங்கள், விட்டுச் செல்லும் இளைஞன் என்றாலும் அவன் பக்கம் இருக்கும் தேவை என எல்லாவற்றையும் சமமாக சொன்னதெல்லாம் சரிதான். ஆனால், அவர்களுக்குள் ஏற்படும் பிரிவு நம்மை பாதிக்கவேயில்லையே? அந்த அளவுக்கு விளையாட்டுத்தனமாகவே சென்றதுதான் காரணம். க்ளைமாக்ஸில் இன்னும் அடுத்த படி சென்று விளையாடியிருக்கிறார்கள். மற்றபடி பியார் பிரேமா காதல்... ஒரு ஸ்வீட் அனுபவம்தான்... பெற்றோருக்கும், சிங்கிள்ஸுக்கும் கசக்கலாம். 'ஓ காதல் கண்மணி'யின் தங்கை, 'சிவா மனசுல சக்தி'யின் அக்கா இந்த 'பியார் பிரேமா காதல்'.