உருவாகிறார் தமிழ் சினிமாவின் விஜய் தேவரகொண்டா? 

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படம் வெளியான பிறகு விஜய் தேவரகொண்டா வளர்ந்த வேகம், அடைந்த உயரம் மிகப் பெரியது. வாரிசுகள் வலிமையாக வளம் வரும் தெலுங்கு சினிமாவில் சாமான்யனாக தெலுங்கு சினிமாவுக்குள் நுழைந்த விஜய் தேவரகொண்டா வலிமையாக வளம் வருகிறார். அர்ஜுன் ரெட்டியின் தாக்கம் அவருக்கு தெலுங்கில் மட்டும் இடம் உருவாக்கித் தரவில்லை. தமிழ், மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய சினிமாத்துறை அனைத்திலும் உருவாக்கித் தந்தது.

harish kalyan

தமிழில் ஹரிஷ் கல்யாண் வரும் பாதையையும், பெண் ரசிகர்களிடையே அவருக்குக் கிடைக்கும் வரவேற்பையும் பார்த்தால் ஹரிஷ் கல்யாணும் தமிழ் சினிமாவின் விஜய் தேவரகொண்டாவாக வளம் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்குக் கிடைத்த விளம்பரத்தை அழகாகப் பயன்படுத்தியவர்களில் இவருக்கு முதலிடமே கொடுக்கலாம். அந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது பெரிதாக பேசப்பட்டவர்கள் ஓவியா, ஆரவ். ஆனால் இவர்களுக்கு முன்பே திரையில் வெற்றி பெற்றிருக்கிறார் ஹரிஷ். பிக்பாஸ் முடிந்தவுடனேயே இளைஞர்கள் இளம்பெண்களை கவரும் வண்ணம் 'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமடைந்தார். தற்போது 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் டீஸர், ஸ்னீக் பீக் என்று அனைத்தும் வெளியாகியுள்ளது. 'அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவரகொண்டாவை நினைவுபடுத்துகிறார் ஹரிஷ். பெண் ஃபாலோவர்ஸ் அதிகம் வைத்திருக்கும் ஹரிஷ், இந்தப் படத்திலிருந்து ஆண்களையும் ஃபாலோ செய்ய வைப்பாரா என்று பார்ப்போம்.

harish kalyan
இதையும் படியுங்கள்
Subscribe