Advertisment

"ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு மொபைல் ஆப்" - ஹரிஷ் கல்யாண் வாக்குறுதி

harish kalyan talk about Mobile App for Auto Driving Women

Advertisment

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஹாரிஸ் கல்யாண் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கடைசியாக அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ‘ஓ மணப்பெண்ணே’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே 'ஸ்டார்' என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துவருகிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="46831314-1903-4f51-8f48-1956f1579be4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_41.jpg" />

இந்நிலையில் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு தனியாக ஸ்டாண்ட் மற்றும் பிரத்யேக மொபைல் ஆப் அமைத்து தருவதாக கூறியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்டு வேலையிழந்த 150 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளருமான பி.டி. செல்வமணி இன்று நிவாரணபொருட்கள் வழங்கினார் இதில், கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் வழங்கிய பின் பேசிய ஹரிஷ் கல்யாண், " பி.டி செல்வகுமார் மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறார். இதனைபார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு தனியாக ஸ்டாண்ட் மற்றும் பிரத்யேக மொபைல் ஆப் உள்ளிட்டவைகளைவடிவமைத்து தர பி.டி செல்வகுமாருடன் இணைந்து பணியாற்றுவேன்" என வாக்குறுதி அளித்துள்ளார்.

harish kalyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe