Advertisment

அஜித் ஸ்டைலை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் பங்கேற்றபின் பியார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என்கிற இரண்டு படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டில் செம ஹிட் அடித்த விக்கி டோனார் என்னும் படத்தின் தமிழ் ரீமேக்கான தாராள பிரபு படத்தில் நடித்திருக்கிறார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Advertisment

harish kalyan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த படம் நடிக்க ஒப்பந்தமானவுடன் மேலும் ஒரு தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஹரிஷ் கல்யாண். கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் பெல்லிசூப்லு. இந்த படம் வேற லெவலுக்கு ஹிட் அடித்தது. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் வாங்கி, தன்னுடைய புரொடக்‌ஷனில் ரீமேக் செய்ய இருந்தார். அதில் விஷ்ணு விஷாலும், சமந்தாவும் நடிக்க இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படப்போவதாகவும், அதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவாணி சங்கர் நடிக்கின்றனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியனது. இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக கேக் வெட்டி கொண்டாடி, அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை அடுத்து, மொத்த யூனிட்டுக்கும் ஹரிஷ் கல்யாண் பிரியாணி விருந்தளித்திருக்கிறார். அப்போது ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர், இயக்குனர் ஆகிய மூவரும் மாறி மாறி தங்களுக்குள் பிரியாணி ஊட்டும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

harish kalyan
இதையும் படியுங்கள்
Subscribe