ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்திலே படக்குழு முடித்தது.
த்ரில்லர் டிராமா ஜானரில் இப்படம் உருவாகியுள்ள இப்படத்திற்குசாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி கடந்த மாதம் வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.