harish kalyan parking ott update

Advertisment

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 1 ஆம் தேதி வெளியான படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கிய இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருந்தார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல நடிகர்களும் இதில் நடித்திருந்தனர். த்ரில்லர் டிராமா ஜானரில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையொட்டி நடந்த சக்சஸ் மீட்டில்இயக்குநர் ராம்குமார்பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ஹரிஷ் கல்யாண். இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 30 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.