/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/harish_0.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் ஹரிஷ் கல்யாண், கடைசியாக இயக்குநர் கார்த்திக்சுந்தர் இயக்கத்தில் ‘ஓ மணப்பெண்ணே’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, 'ஸ்டார்' என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துவருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின்முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.இப்படத்தை எஸ்.பி. சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தார்ட் ஐ என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க, டி. இமான் இசையமைக்கவுள்ளார்.
வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ள இத்திரைப்படத்தின் பணிகள் நேற்று (13.12.2021) பூஜையுடன் தொடங்கப்பட்டது. இயக்குநர்வெற்றி மாறன் படத்தின் முதல் ஷாட்டுக்கு கேமராவை ஆன் செய்து தொடங்கிவைத்தார். மேலும், இந்நிகழ்வில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)