Advertisment

ரஜினியின் தளபதி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண்! 

harish kalyan

அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடித்து வெளியான படம் பியர் பிரேமா காதல். இப்படத்தை யுவன்சங்கர் ராஜா இசையமைத்து, தயாரித்திருந்தார். இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, இளன், ஹரிஷ் கல்யாண், யுவன்சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக மட்டும் பணிபுரிய உள்ளார். ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ட்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அதில், ரஜினிகாந்த் நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளியான தளபதி படத்தில், ரஜினிகாந்த் தோன்றும் சாயலில் ஹரிஷ் கல்யாண் காட்சியளிக்கிறார்.

Advertisment

ரஜினியின் 70-ஆவது பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.

harish kalyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe