Advertisment

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஹரிஷ் கல்யாண் படக்குழு!

ghsdhd

கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் 'பெல்லிசூப்லு'. இந்தப் படம் வேற லெவலுக்கு ஹிட் அடித்தது. இந்தப் படத்தை ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி. சார்பில் தயாரிப்பாளர் சத்யநாராயணா கொனேரு, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் ஏ ஹவிஷ் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் ரீமேக் செய்தனர். அதில் நடிகர் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்தனர். கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் 'ஓ மணப்பெண்ணே' என பெயரிடப்பட்ட இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Advertisment

இந்த வரவேற்பைக் கொண்டாடும் வகையில், படத்தை வெற்றிபெறச் செய்த ரசிகர்களுக்கு, தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், தரமான கதைகளுக்கு எப்போதும் சிவப்பு கம்பள வரவேற்பு தரும் தமிழ் ரசிகர்களின் மீதான பெரும் நம்பிக்கையில், தங்கள் திரைப்பயணத்தை தமிழ் சினிமாவில் தொடர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மிக விரைவில் சில பெரிய திரைப்படங்களை தமிழில் அறிவிக்கவுள்ளனர். இத்தயாரிப்பு நிறுவனம் தெலுங்கில் ரவிதேஜா, அர்ஜூன் நடிப்பில், தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கும் 'கில்லாடி' படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது.

Advertisment

harish kalyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe