Skip to main content

கலப்பை மக்கள் இயக்கத்தோடு முடிதிருத்தும் பணியாளர்கள் 130 பேருக்கு உதவிய ஹரீஷ் கல்யாண்! 

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

cfxfh

 

கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு தமிழகம் முழுவதும் 47 நாட்களாக கலப்பை மக்கள் இயக்கம் உதவி வருகிறது. இந்த நேரத்தில் கேளம்பாக்கம், படூர், துரைப்பாக்கம் பகுதிகளில் வேலையில்லாமல் தவிக்கும் 130 முடிதிருத்தும் பணியாளர்களுக்கும், அழகு நிலையம் நடத்தும் பெண்களுக்கும் இன்று கலப்பை மக்கள் இயக்கம் அரிசி பைகள் வழங்கியது.  கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் பிடி செல்வகுமார் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் அரிசி மூட்டைகள் வழங்கினார்கள். இதுகுறித்து கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பிடி செல்வகுமார் பேசியபோது...
        


"நாட்டில் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு முடிதிருத்தும் பணியாளர்கள் உதவியாக இருந்து வருகிறார்கள். அன்றாடம் வாடகை கொடுத்து கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் நேச்சுரல்ஸ் பியூட்டி என்ற மிகப் பெரிய நிறுவனம் கோடி கணக்கில் வருமானவரி கட்டி வருகிறது. அதன் நிறுவனத் தலைவரே நாங்கள் மிகவும் கஷ்டமான சூழலில் இருக்கிறோம், எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அரசிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். மிகப்பெரிய நிறுவனங்களே இப்படிக் கேட்கும் போது அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் இவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள். நாங்கள் உதவி செய்வது பெரிய விஷயம் இல்லை. மற்றவர்களிடம் கையேந்தி வாழ்வதைவிட உழைத்து வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள் இந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள். 

 

உடனடியாக பாதுகாப்பு அளித்து கடைகளைத் திறந்து அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். இதை உடனடியாகச் செய்தால் மிகவும் சந்தோஷப்படுவார்கள். ஏழைகளிடம் பணம் புழங்க தொழிலதிபர்களுக்கு தளர்வு. அதுமட்டுமில்லாமல் விதிமுறை மீறல் இன்னும் தளர்த்தப் படாமல் இருப்பதால் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தங்களுடைய பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். மாவட்டத்தை விட்டு மற்ற மாவட்டங்களில் தொழில் செய்துவரும் கட்டிடத் தொழிலாளர்கள் விவசாயம் செய்பவர்கள் உடனடியாக அவர்களுக்கு சிறப்புப் பாஸ் அனுமதி கொடுத்து அவர்களின் தொழிலையும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால்தான் பல தொழிலாளர்கள் வாழமுடியும். எவ்வளவுதான் இன்று கடைகளை எல்லாம் திறக்க சொன்னாலும் மக்களிடம் வாங்குவதற்குப் பணம் இல்லாமல் திணறி வருகிறார்கள். 
 


மாவட்டம் விட்டு  மாவட்டம் பத்திரப்பதிவிற்கு உதவுங்கள். உடனடியாக பத்திரப்பதிவு செய்ய மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அனுமதி கொடுத்தால் அரசுக்கு 10% வருமானம் வரும். ஏனென்றால் பத்திரப்பதிவு தனிநபராகத் தான் சென்று பதிவு செய்வார்கள். அதனால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. ஏற்கனவே கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் பசியால் யாரும் இறந்துவிடக் கூடாது என்ற ஒரு கோரிக்கையைத் தொடக்கத்திலிருந்தே வைத்துக்கொண்டு அரிசி மற்றும் மளிகைச் சாமான்கள் வழங்கி உதவி செய்து வருகிறோம். நேற்றைய தினம் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விவசாயி பசியால் தன்னுடைய மூன்று மகள்களோடு தற்கொலை செய்து கொண்டார். இது கொடுமையிலும் கொடுமை உடனடியாக அரசு இவர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எங்களுடைய பணிவான வேண்டுகோள்'' என்றார்.

 

அதன்பின்பு காஞ்சிபுரம் மாவட்ட சவர சங்கச் செயலாளர் ருக்மாங்கதன்  பேசியபோது... ''இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிட்டத்தட்ட 55 நாட்களாக மிகவும் வறுமையில் தவித்தோம். எல்லா இடங்களுக்கும் தேடிச்சென்று கலப்பை மக்கள் இயக்கம் உதவுவது போல் எங்களுக்கும் தேடி வந்து உதவினார்கள். இந்த உதவி எங்களுக்குச் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட  உதவி. எங்கள் வாழ்நாள் முழுவதும் கலப்பை மக்கள் இயக்கத்தையும், நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்களையும் மறக்கமாட்டோம்'' என்று பேசினார். இந்த நிகழ்விற்கு தங்கபாண்டியன், வேண்டரசி ஆகியோர் உதவியாக இருந்தார்கள். அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து மக்கள் இன்முகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் பெற்றுக் கொண்டார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித்துக்கும் விஜய்க்கும் இருந்த மனத்தாங்கல் - சுவாரசியம் பகிரும் பிஆர்ஓ பி.டி. செல்வகுமார்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

PT selvakumar interview about vijay & ajith

 

நடிகர் விஜய் உடன் பல ஆண்டு காலம் இருந்த, அவருடைய முன்னாள் பி.ஆர்.ஓ  பி.டி. செல்வகுமார் திரையுலகில் தன்னுடைய பல்வேறு அனுபவங்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

விஜய்யோடு 25 ஆண்டுகள் பணிபுரிந்த நீங்கள் அவருடைய சமகாலப் போட்டியாளரான அஜித்துடன் 'ஆழ்வார்' படத்திலும் பணிபுரிந்தீர்கள். எப்படி அது நடந்தது?

 

"இவர் விஜய் ஆளு" என்கிற முத்திரை என் மேல் விழுந்திருந்த நேரம் அது. விஜய் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நான் கவனித்து வந்தேன். 'ஆழ்வார்' படத்தின் தயாரிப்பாளருக்கு நான் நீண்டகாலமாக பி.ஆர்.ஓ-வாக இருந்தேன். ஆழ்வார் பட வாய்ப்பு வந்தபோது அவரிடம் "இது சாத்தியமா? அஜித் அனுமதிப்பாரா?" என்றேன். ஆனாலும் என்னை அந்தப் படத்தின் பிஆர்ஓ ஆக்கினார்கள். அஜித் என்ன சொல்வாரோ என்கிற பதற்றம் எனக்கு இருந்தது. ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொண்டார். அதுதான் அவரின் பெருந்தன்மை. விஜய்யிடம் இதுகுறித்து தவறாகச் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்த பலர் முயன்றனர். ஆனால் விஜய்யும் உண்மை நிலையைப் புரிந்துகொண்டார்.

 

ஆழ்வார் படத்தில் பணிபுரியும் போது அஜித்தோடு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் என்ன?

 

அஜித் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். கடுமையான உழைப்பாளி. அடுத்தவர் வேலையில் தலையிடமாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். மிகுந்த துணிச்சல்காரர் அஜித். 

 

விஜய் -அஜித் இருவருடைய நட்பு எப்படிப்பட்டது?

 

ஆரம்பத்தில் இருவருக்கும் மனத்தாங்கல்கள் இருந்தன. அதன் பிறகு இருவரும் பரஸ்பரம் ஒருவருடைய நிகழ்வுக்கு இன்னொருவர் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். அதன் மூலம் ஒரு நட்பு இருவருக்கும் உருவானது. இருவருக்குமே நம்பர் ஒன்னாக வரவேண்டும் என்கிற எண்ணம் இருக்குமே தவிர, ஒருவர் பற்றி இன்னொருவர் குறை கூற மாட்டார்கள். 

 

விஜயகாந்த்தோடு உங்களுடைய அறிமுகம், அவருடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து...

 

விஜயகாந்த் ஒரு அபூர்வமான மனிதர். அவருடைய உழைப்பு அசுரத்தனமானது. ஒரே நேரத்தில் பல படங்களில் பணியாற்றுவார். அதனால் அவருடைய உடலை அவர் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை. திருமண உதவிக்காக ஒருவரை அழைத்துச் சென்றபோது யோசிக்காமல் உடனடியாக 2 லட்சம் கொடுத்தார். தங்கமான மனிதன். அனைவரோடும் உரிமையுடன் பழகுவார். 

 

சூர்யாவோடு நீங்கள் பல படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். அவருடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

முதலில் அவருக்கான சூழல் சரியாக இல்லை. ஆனால் முன்னணி நடிகராக வருவதற்கு அவர் அப்போதிலிருந்தே கடுமையாக உழைத்தார். நான் விஜய்யுடன் இருப்பதால் சூர்யாவுக்காக எப்படி பணியாற்றுவேன் என்கிற சந்தேகம் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இருந்தது. ஆனால் அவருக்காகவும் நான் சிறப்பாகப் பணியாற்றி அவர்களுடைய பாராட்டுகளைப் பெற்றேன். கஜினி படத்தின் போது நான் ஒரு சரியான பிஆர்ஓ என்று சூர்யாவே சொல்லியிருக்கிறார்.


 

Next Story

மேடை மற்றும் இசை கலைஞர்களுக்கு விஜய் பட தயாரிப்பாளர் உதவி!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020
pt selvakumar

 

கரோனா வைரஸ் உலகத்தையே அசச்சுறுத்தி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயாரிப்பாளர் PT செல்வகுமார் தொடர்ந்து 65 நாட்களாக உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று குமரி மாவட்டத்தை சேர்ந்த மேடை கலைஞர்கள், இசை கலைஞர்கள், சமையல் தொழிலாளர்கள், பந்தல் செட் அமைப்பவர்கள், தையல் தொழிலாளர்கள் 108 பேருக்கு அரிசி மூட்டைகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. இதில் அதிமுக டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு. தளவாய் சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

நிகழ்ச்சியை தொடர்ந்து தயாரிப்பாளர் PT செல்வகுமார் பேசுகையில், “மதம், இனம், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு கலப்பை மக்கள் இயக்கம் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக குமரி மண்ணில் சமத்துவ பொங்கல், 58 பசுக்களுடன் கோ பூஜை போன்றவற்றை நடத்தினோம். தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த கலைஞர்களுக்கு தளவாய் சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு வழங்கியது அனைவருக்கும் உற்சாகம் தருகிறது. குமரி மக்களின் குரலாக டெல்லியில் ஒலித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் இந்த நிகழ்வுக்கு அழைத்ததும் உடனடியாக எப்போது வரவேண்டும் என்று பெருந்தன்மையோடு கேட்டார். அவர் இதை போன்று பண்போடும், அதிகாரத்தோடும், நீண்ட ஆயுளோடு இருக்க  இறைவனை வேண்டுகிறோம்” என்றார். பின்னர் மக்கள் அனைவருக்கும் சத்து மாத்திரை வழங்கப்பட்டது.