harish kalyan is doing the lead role in dhoni's tamil movie

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனிஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். இதனிடையே விவசாயம் செய்வதிலும்விளம்பரங்களில் நடிப்பதிலும்கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

மேலும் 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 'ரோர் ஆஃப் லயன்' என்ற ஆவணத்தொடரை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 'ப்ளேஸ் டு க்ளோரி' (Blaze to Glory) என்ற ஆவணப்படம் உள்ளிட்ட சில படைப்புகளை தயாரித்துள்ளது.

Advertisment

சில தினங்களுக்கு முன்பு 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இப்படம் சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கம் கொண்டுஒரு குடும்பப் பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனவும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குவதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோ யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரிஷ் கல்யாண்'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து 'டீசல்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.