harish kalyan diesel movie update

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், தற்போது தோனி தயாரிக்கும்'லெட்ஸ் கெட் மேரீட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் நூறு கோடி வானவில், லப்பர் பந்து, டீசல்,பார்க்கிங்உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ஹரிஷ் கல்யாணுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்படப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'டீசல்' படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இப்படத்தை 'எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்' தயாரிக்க ஷண்முகம் முத்துசாமி இயக்குகிறார். கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment