/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/347_4.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். கடைசியாகத் தெலுங்கில் வெற்றி பெற்ற 'பெல்லி சூப்புலு' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஓ மணப்பெண்ணே' படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து 'எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்' தயாரிக்கும் 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார். ஷண்முகம் முத்துசாமி இயக்கும் இப்படத்தில் அதுல்யா கதாநாயகியாக நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், இன்று (29.06.2022) தனது 32-வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதனையொட்டி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் ஹரிஷ் கல்யாணுக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட 'டீசல்' படக்குழு, தற்போது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆக்ஷன் படங்களில் ஹரிஷ் கல்யாண் களமிறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)