மீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் பங்கேற்றபிம் பியார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என்கிற இரண்டு படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டில் செம ஹிட் அடித்த விக்கி டோனார் என்னும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்க இருக்கிறார்.

harish kalyan

தனுஷு ராசி நேயர்களே என்னும் ஹரிஷ் கல்யாணினுடைய படம் ரிலீஸாகியுள்ள நிலையில் மேலும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் பெல்லிசூப்லு. இந்த படம் வேற லெவலுக்கு ஹிட் அடித்தது. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் வாங்கி, தன்னுடைய புரொடக்‌ஷனில் ரீமேக் செய்ய இருந்தார். அதில் விஷ்ணு விஷாலும், சமந்தாவும் நடிக்க இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. அதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவாணி சங்கர் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்க உள்ளார். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

harish kalyan priya bhavani shankar
இதையும் படியுங்கள்
Subscribe