“உங்கள் தேர்வு மதிப்பெண் உங்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்காது” -நடிகர் ஹரிஷ் கல்யாண்!

harish kalyan

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுகள் நேற்று இந்தியா முழுவதும் நடந்து முடிந்தது. இதற்கிடையே இந்த தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.

இது தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த மூன்று மாணவர்களின் விபரீத முடிவு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு முடிவு அல்ல. மாணவர்கள் அவர்கள் பெற்றோரையும், குடும்பத்தையும் மனதில் கொள்ள வேண்டும். உங்கள் தேர்வு மதிப்பெண் உங்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்காது, என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று அனைத்து மாணவ நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

harish kalyan
இதையும் படியுங்கள்
Subscribe