''அந்த மாதிரி சூழலை உருவாக்குவது நமது கடமையாகும்" - ஹரிஷ் கல்யாண் 

hsff

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் கரோனாவால் திரையுலகமும் முடங்கியுள்ளதால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது நிலவும் சுற்றுசூழல் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

''ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது நமது கடமையாகும், இது அனைத்து உயிரினங்களின் சகவாழ்வையும் ஆதரிக்கும் வகையில் நமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த பூமியை விட்டுச்செல்லும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்'' எனக் கூறியுள்ளார்.

harish kalyan
இதையும் படியுங்கள்
Subscribe