”பார்க்கிங் பிரச்சனைகளில் கொலைகள் கூட நடந்திருக்கு” - ஹரிஷ் கல்யாண்

harish kalyaan about  parking movie

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்திலே படக்குழு முடித்தது. த்ரில்லர் டிராமா ஜானரில்உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வருகிற 17ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகிறது. டிசம்பர் 1 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.

இப்படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “இந்த கதையை கேட்டவுடன் நமக்கும் இது எங்கேயோ நடந்திருக்கே என யோசிக்க வைத்தது. மேலும் சின்ன வயசு ஞாபகங்களை நினைவூட்டியது. பார்க்கிங் சம்பந்தமாக நிறைய உண்மை சம்பவங்களை தேடிய போது, கொலையும் நடந்திருக்கு. இந்த படத்தில் எனக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இடையே பார்க்கிங் பிரச்சனை வருகிறது. அதற்காக இரண்டு பேரும் எந்த அளவிற்கு செல்கிறோம் என்பது தான் கதை. காரை காராக பார்த்தால் பிரச்சனை இல்லை. உயிராக பார்த்தால் தான் பிரச்சனை” என்றார்.

harish kalyan
இதையும் படியுங்கள்
Subscribe