Skip to main content

”பார்க்கிங் பிரச்சனைகளில் கொலைகள் கூட நடந்திருக்கு” - ஹரிஷ் கல்யாண்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

harish kalyaan about  parking movie

 

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்திலே படக்குழு முடித்தது. த்ரில்லர் டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வருகிற 17ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகிறது. டிசம்பர் 1 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.

 

இப்படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசுகையில்,  “இந்த கதையை கேட்டவுடன் நமக்கும் இது எங்கேயோ நடந்திருக்கே என யோசிக்க வைத்தது. மேலும் சின்ன வயசு ஞாபகங்களை நினைவூட்டியது. பார்க்கிங் சம்பந்தமாக நிறைய உண்மை சம்பவங்களை தேடிய போது, கொலையும் நடந்திருக்கு. இந்த படத்தில் எனக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இடையே பார்க்கிங் பிரச்சனை வருகிறது. அதற்காக இரண்டு பேரும் எந்த அளவிற்கு செல்கிறோம் என்பது தான் கதை. காரை காராக பார்த்தால் பிரச்சனை இல்லை. உயிராக பார்த்தால் தான் பிரச்சனை” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ ஓடிடி அப்டேட்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
harish kalyan parking ott update

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 1 ஆம் தேதி வெளியான படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கிய இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருந்தார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல நடிகர்களும் இதில் நடித்திருந்தனர். த்ரில்லர் டிராமா ஜானரில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையொட்டி நடந்த சக்சஸ் மீட்டில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ஹரிஷ் கல்யாண். இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 30 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.   

Next Story

இயக்குநரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
harish kalyan gifted parking movie director regards his movie hit

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். த்ரில்லர் டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையொட்டி படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது ஹரிஷ் கல்யாண் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எம்.எஸ். பாஸ்கர், “இந்தப் படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி. ராம், முருகேஷ், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, பிரார்த்தனா என இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. சில படங்கள் ஆரம்பத்தில் டல்லாக இருக்கும், போகப் போக பிக்கப் ஆகும். அப்படியான படங்கள் காலத்துக்கும் நிற்கும். படத்தில் கார் வாங்கும் சீனுக்காக படப்பிடிப்பிலும் நான் கோபமாக இருந்தது உண்மை. காட்சியை அப்படியே நிஜத்திலும் பின்தொடர வேண்டும் என நினைப்பேன். வீட்டுக்குள் இருக்கும் பிரச்சினையை நல்ல விதமாக படமாக்கியுள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் எல்லோருடைய ஒத்துழைப்புக்கும் வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி”.

ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கும் நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார். படத்தில் வேலை பார்த்த எம்.எஸ். பாஸ்கர் சார், இந்துஜா, பிரார்த்தனா அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது” என்றார்.