Advertisment

வைப்-ஆன ஹாரிஸ் ஜெயராஜ்; ஷாக்கான ஜெயம் ரவி

harish jayaraj dance in brother audio launch

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிரதர்’. ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், நட்ராஜ், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி. கணேஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து ‘மக்காமிஷி...’ என்ற பாடல் கடந்த ஜூலையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று(21.09.2024) நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆட்டோவில் வருகை தந்தார் ஜெயம் ரவி. இது அங்கிருந்தவர்களின் கவனத்தை பெற்றது. மேலும் நிகழ்ச்சியில் பிரியங்கா மோகன், ஹாரிஸ் ஜெயராஜ், பூமிகா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். பின்பு ஒவ்வொருத்தராகப் படம் குறித்து மேடையில் பேசினர். பின்பு ஜெயம் ரவி மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஒன்றாக மேடை ஏறினர். அப்போது பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், “மக்காமிஷி பாடல் ஹிட்டாகும் என நூறு சதவிதம் நினைத்தேன். அதை போதும் போதும் என்ற அளவிற்கு கேட்டிருக்கிறேன். இந்த பாடல் ரெக்கார்ட் செய்து ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. தியேட்டரில் ஆடியன்ஸை வரவழைப்பதற்காக இந்த பாடலை உருவாக்கினேன்” என்றார்.

Advertisment

பின்பு தொகுப்பாளினி ஹாரிஸ் ஜெயராஜிடம் மக்காமிஷி பாடலுக்கு அருகில் இருக்கும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடனமாட சொல்லி கேட்டுள்ளார். உடனே ஹாரிஸ் ஜெயராஜ், ஆடத் தொடங்கினார். இதை கண்டு ஜெயம் ரவி ஷாக்காவிட்டார். பின்பு இருவரும் சேர்ந்து மக்காமிஷி பாட்டில் இடம்பெறும் நடனத்தை அப்படியே நடனமாடி காண்பித்தனர். இது அங்கு பலரது கவனத்தை பெற்றது.

brother jayam ravi harris jayaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe