/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/352_15.jpg)
பிரபல பாடகர் ஹரிஹரனின்‘ஸ்டார் நைட்’ இசைநிகழ்ச்சி இலங்கை யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் நேற்று இரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தமன்னா, ரம்பா, கலா மாஸ்டர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். நடிகர் சிவா மற்றும் சின்னத்திரை பிரபலம் திவ்யதர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்த விழாவில் விஐபி டிக்கெட்டுகள் என குறிப்பிட்ட சில இடங்கள் ஒதுக்கப்பட்டு மற்ற இடங்களை இலவசமாக பார்வையாளர்களுக்கு அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரு இடங்களுக்கு மத்தியில் சில இடங்களை காலியாக விட்டுவிட்டு தடுப்பு சுவர் போட்டு வைத்துள்ளதாக சொல்லபடுகிறது. ஆனால் அந்த இலவச இடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வந்ததால் விஐபி இடத்திற்கும் இலவச இடத்திற்கும் இடையில் இருந்த காலியான இடத்தில் பார்வையாளர்கள் செல்ல முயன்றனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவறுகளை மீறி ரசிகர்கள் உள்ளே குவிந்துள்ளனர். இதனால் அந்த கூட்டத்தை காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் இருந்த நிலையில் பர்வையாளர்களுக்கும் அவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கூட்டத்தில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு பலரும் பல சிக்கலுக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸார் அறிவுறுத்தியும் உள்ளே வந்தவர்கள் பின்னே போகாததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் நிகழ்ச்சியை நடத்த முடியாமல் தவித்தனர். அதோடு நிகழ்ச்சியும் இடைநிறுத்தப்பட்டு பின்பு குறுகிய நேரத்திலே முடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதுஇது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் அனுமதிக்கும்மீறி ஏராளமானோர் குவிந்ததால் பெரும் சர்சையானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)