Advertisment

மாமா - மச்சான் இணையும் 'மாஸ்' கூட்டணி!

arunvijay

'சாமி 2' படத்திற்குப் பின்னர்இயக்குனர் ஹரி, சூர்யாவுடன் இணைந்து பணிபுரியவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Advertisment

மேலும், அந்தப் படத்திற்கு 'அருவா' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாக இருந்த படம், கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தடைப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் படத்தை ஹரி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை அருண் விஜய் ஃபோட்டோ ஷூட் படங்களும் உறுதிப்படுத்தின. ஹரி - அருண் விஜய் இணையும் படத்தினை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக அருண் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண்விஜய் ஆகிய இருவரும் 'மாமா', 'மச்சான்' உறவுமுறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

arun vijay hari
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe