கரோனா பாதிப்பால் தன் சம்பளத்தைக் குறைத்த முதல் இயக்குனர்!

bdsh

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதைச் சரி செய்யும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் தாங்களாக முன்வந்து சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இவர்களைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ஹரியும் 'அருவா' படத்துக்கான தனது சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"இந்த கரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்குத் திரும்பும். இந்தச் சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப்போகும் “அருவா” திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளேன். நன்றி.

அன்புடன்,

ஹரி

இயக்குனர்"

எனக் குறிப்பிட்டுள்ளார்.

Aruva hari suriya
இதையும் படியுங்கள்
Subscribe