'சிங்கம் 4' - மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி?

hari and suriya re united for singam 4

தமிழ் சினிமாவில் விறுவிறு காட்சிகள், அடுக்கு மொழியில் வசனம், தெறிக்கும் சண்டைக் காட்சிகள் என ஒரு ட்ரேட் மார்க் ஸ்டைலை ஃபாலோ பண்ணி படம் எடுத்து வருபவர் இயக்குநர் ஹரி. கடைசியாக அருண் விஜய்யை வைத்து 'யானை' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஹரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவை வைத்து சிங்கம் படத்தின் 4ஆம் பாகத்தை எடுக்கத்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான கதை உருவாக்கத்திலும் ஹரி ஈடுபட்டுள்ளதாகவும், முழுக் கதை ரெடியானதும் சூர்யாவிடம் சொல்ல இருப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் வெளியான 'ஆறு', 'வேல்', ‘சிங்கம் 1,2,3,' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் 'சிங்கம் 4' படம் உருவாகுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம். சூர்யா தற்போது சிறுத்தை சிவாவின் 'சூர்யா 42', பாலாவின் 'வணங்கான்', வெற்றிமாறனின் 'வாடி வாசல்' என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor suriya director hari
இதையும் படியுங்கள்
Subscribe