Advertisment

"மங்காத்தா செகண்ட் பார்ட் எடுத்தா...." வெங்கட் பிரபுவுக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள்!

Harbhajan Singh

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஸ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃப்ரெண்ட்ஷிப்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து, இந்தாண்டு கோடைவிடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

Advertisment

தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி 'ஃப்ரெண்ட்ஷிப்' திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக படத்தின் ட்ரைலரை வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் அப்பதிவைப் பகிர்ந்த ஹர்பஜன் சிங், "வெங்கட் பிரபு ஜி நன்றி. மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க" எனக் கருத்துப் பதிவிட்டுள்ளார். ஹர்பஜன் சிங்கின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisment

venkat prabhu HARBHAJAN SINGH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe