“கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல்...” - லப்பர் பந்து குறித்து ஹர்பஜன் சிங்

harbhajan singh praised lubber pandhu movie

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக இந்த படத்தில் நடித்த அட்டக்கத்தி தினேஷ் விஜயகாந்த் ரசிகராக நடித்திருப்பதால் முக்கியமான இடங்களில் விஜயகாந்தின் ‘நீ பொட்டு வெச்ச தங்க குடம்...’ பாடல் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பல்வேறு பிரபலங்களின் பாராட்டையும் பெற்று வருகிறது. அந்த வகையில் திரைபிரபலங்கள் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, அஷ்வின் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “என்னோட அடுத்த தமிழ் பட டைரக்‌ஷன் டீம் சொன்னாங்க, ‘சார் லப்பர் பந்துன்னு ஒரு படம் வந்துருக்கு, கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு’. கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

attakathi dinesh HARBHAJAN SINGH harish kalyan
இதையும் படியுங்கள்
Subscribe