Advertisment

சந்தானத்துடன் கைகோர்க்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்...

சமீபத்தில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் “அக்யூஸ்ட் நம்பர் ஒன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார் சந்தானம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து டகால்டி என்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். இந்த படத்தின் போஸ்டரில் புகை பிடிப்பதுபோல போஸ் கொடுத்திருந்தது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. பின்னர் சந்தானம் இதற்கான மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். மேலும் இரண்டு வருடங்களாக ரிலீஸாகமல் தள்ளி தள்ளி போய்க்கொண்டிருக்கிறது சர்வர் சுந்தரம்.

Advertisment

harbajan singh

இந்நிலையில்தான் அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் நடிக்கப் போகிறார் சந்தானம் அதுவும் மூன்று வேடங்களில் நடிக்கிறார் அப்படத்தின் பெயர் டிக்கிலோனா என்று அறிவிப்பு வந்தது. பல படங்களில் நடிகராகவும், திரைக்கதையில் பணிபுரிந்தும் வந்த கார்த்தி யோகி டிக்கிலோனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிக்கிறார்.

இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ்.சினிஸும் இப்படத்தினை தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது படக்குழு. ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இணைந்ததில் இருந்து தமிழில் பல ட்வீட்களை பதிவு செய்து அசத்தி வருகிறார். பலரும் இவரை வள்ளூவர் என்று கிண்டலடித்தும் வருகின்றனர். அந்தளவிற்கு தமிழில் நாட்டம் கொண்டதுபோல் ட்வீட் செய்து வரும் நிலையில் தமிழ் படத்தில் ஹர்பஜன் நடிப்பது தமிழ் ரசிகர்களுக்கு குஷியோ குஷி!

Santhanam Harbajan Singh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe