Advertisment

"இந்தி பட வாய்ப்பு வந்தால் டி-ஷர்ட்டை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள்! ஜாக்கிரதை!" - நடிகை ஆர்த்தி எச்சரிக்கை!

ewg

Advertisment

பிரபலங்கள் பலரும் 'இந்தி தெரியாது போடா', 'ஐயம் எ தமிழ் பேசும் இந்தியன்' போன்ற வாசகங்கள் பொறித்த டி-ஷர்ட்டுகளை அணிந்து சமூகவலைத்ததில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. டி-ஷர்ட்டில் இருந்த வசனம்தான் அந்த விவாதத்திற்கு பெரும் காரணமாக அமைந்தது. இதனை தொடர்ந்து பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக 'இந்தி தெரியாது போடா' என்ற வசனத்தை ட்ரெண்ட் செய்து வந்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவிக்க, இன்னொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் இதுகுறித்து பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

"நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்...ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு..அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம்... இந்தி பட வாய்ப்பு வந்தால் t. Shirtயை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை" என கூறியுள்ளார்.

Hindi imposition actress Harathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe