/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/385_5.jpg)
ஹன்சிகா கடைசியாக தனது 50வது படமான 'மஹா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை அடுத்து ஆதி நடிப்பில் உருவாகி வரும் 'பார்ட்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இப்படத்தில் ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாகவும் எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளார்கள். தயாரிப்பாளர் தனஞ்செயன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)