Advertisment

ஹன்சிகாவை சுற்றி எழுந்த பல சர்ச்சைகளை பற்றி பேசும் 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா'

Hansika’s Love Shaadi Drama  talks about the many controversies surrounding Hansika

Advertisment

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 50 படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணம் ஒரு நிகழ்ச்சியாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஹன்சிகாவும் அவரது தாயும் தங்கள் கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியும், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முன்னெடுப்புகளை பற்றியும் முதல் எபிஸோட் பேசுகிறது. சோஹேல் உடைய கடந்த காலம் தொடர்பான செய்திகளால் ஹன்சிகா பாதிக்கப்பட்டுள்ளாரா? என்று ஹன்சிகாவின் தாயார், ஹன்சிகாவிடம் கேட்கும்போது, தனக்கு அப்படியொன்றும் பெரிதாககவலைகள் இல்லை என்று ஹன்சிகா கூறுகிறார். முன்பு அந்த வருத்தம் இருந்ததாகவும், இப்போது அது தொந்தரவு செய்யவில்லை என்றும் கூறுகிறார்.

எபிசோட் அடுத்த கட்டத்தை எட்டும் போதுமணமகனும்மணமகளும் சேர்ந்து ஜெய்ப்பூருக்கு வந்து திருமணத்திற்குத் தயாராவதை அதில் காணலாம். போலோ போட்டிக்குப் பிறகு, தனது மெஹந்தி நாளில் டெர்பி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற ஆசை ஹன்சிகாவிற்கு வருகிறது. இது வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றினாலும், அவரது தாயும்திருமணத்தை திட்டமிடுபவரும் அவருடன் நெடுநேரம் இதைப் பற்றி விவாதிப்பதையும் அதில் காணலாம்.

Hansika Motwani hotstar
இதையும் படியுங்கள்
Subscribe