Advertisment

''இந்தக் கெட்ட கனவு முடிவுக்கு வர வேண்டும்'' - ஹன்சிகா இரங்கல்!

sgs

கரோனா பாதிப்பு நெருக்கடிக்கு இடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை 'அம்பன்' புயலாக மாறி முதலில் தமிழகத்தை நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்டது.

Advertisment

பிறகு இந்தப் புயல் வடமேற்கு திசை நோக்கி மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. மேலும் புயலுக்கு இதுவரை 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இதற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி அம்பன் புயல் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், அம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் சிதைவுகள் மற்றும் அழிவுகளின் பாதையை விட்டுச் சென்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்காக என் இதயம் வெளியே செல்கிறது. இந்தக் கெட்ட கனவு முடிவுக்கு வர வேண்டும்! கொல்கத்தா மற்றும் ஒடிஷாவுக்கான என் பிரார்த்தனைகள்'' எனப்பதிவிட்டுள்ளார்.

Advertisment

Hansika Motwani hansika
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe