hansika finished maha shooting

தமிழில் முன்ணனி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தொலைக்காட்சி தொடர்களிலும், இந்தி திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர், தேசமுதுரு படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் , எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார் ஹன்சிகா.

Advertisment

நயன்தாரா ,திரிஷா ஆகியோர் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதை போல், ஹன்சிகாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான 'மஹா' படத்தில் நடித்து வந்தார்.இப்படம் ஹன்சிகாவின் ஐம்பதாவது திரைப்படமாகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் சிம்பு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை, இந்த வருட கோடை விடுமுறைக்காலத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் கரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சமீபத்தில் மீண்டும் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

மஹா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை,படக்குழுவினோரோடு கொண்டாடும் படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹன்சிகா, " மஹா படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி" என படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் சிம்புவிற்கு மிக்க நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.